Monday, July 29, 2013



எறும்பும் ... அவளும் 
---------------------------------

எனக்கு  இப்போது தான் விளங்கிற்று  ஏன் 
எறும்புக்கூட்டம் இங்கு செல்கிறது கிழக்கு நோக்கி!
என்  வெல்லத்தை தேடி இந்தியாவிற்கு!

அவள்  தொலைபேசி மணியோசை கூட 
பெருங்கலவரம் கலந்தது அதனிடையில் ....
யார் அவள் அழைப்பை ஏற்பதென்று !

என்னவளோ என்னை மட்டுமே தேர்வு செய்ய 
தலைகள் கவிழ்த்தன! தாடிகள் வளர்ந்தன!

Thursday, July 25, 2013

poems???

வெண்சங்கொலி பரப்பும் சமுத்திரதருகே 
அமர்திருந்த கார்குழலியின் முகம்காண 
ஆதவன் ஓராயிரம் மைல் கடந்து எழுந்திட்டான்..
அலைமகளோ ஓராயிரம் வெண்புரவியில் புறப்பட்டாள்
அவள்  காலடியில் தஞ்சம்புக..
உள்ளாளன் மனம் அவன் மடல் கண்டு 
சிலிர்த்த அத்தாரகையை 
நோக்கினோர் வினவினர்        
இது அந்த அலையின் செயலா 
இல்லை அவனின் செயலா?? 

நெற்றிச்சூடி!!!
தடை பல கடந்து 
தயக்கங்களை மறந்து   
அவளருகே அவன்  நெருங்க 
நெற்றிச்சூடி இறுதி  தடையாக 
அவள் உச்சியில் அவன்  திலகமிட..


ஒட்டியானம்!
கானகத்து நறுமலரின் நாற்றமிகு 
என் பூங்கோதையின் -இடை  படர்ந்து 
ஒட்டி உறவாடிற்று ஒட்டியானம்!

என் பூங்கோதையை ஒட்டிய`நாண் ஆதலினால்தான் 
நீ ஒட்டியனமோ ! 

Wednesday, July 24, 2013

என்னவளே !!!

இயக்கமற்ற இரவினிலே ஏங்கி  இங்கு  நான்  இருக்க 
இயற்கையின்  கொடையாய்  எங்கிருந்தோ நீ  வந்தாய் 

காதருகே உன் குரல் சினுங்க 
காட்சி மட்டும் மறைந்தது ஏன் ?

காலம் இங்கு கனியவில்லை 
கண் இமையும் சரிய வில்லை 

தலைவியின் தலை கோத 
அவள் இதயமிடம் குடி ஏற 

பொறுத்திரு மனமே  , முதலில் 
உன் புதியவள் கரம்பற்ற !!!

Sunday, March 27, 2011

ஏழைகளின் பசி!!!

உறக்கமும் மயக்கமும் தான் எங்களின் வரங்கள்
இல்லையேல் மூன்று நேர போராட்டம்
ஆறு நேரமாகி இருக்கும் !!!

Wednesday, January 26, 2011

கல்வி முறை!

சுகந்திரத்தை பறித்து
சுயசிந்தனையை கொன்று
மனிதனை கிளியென மாற்றும்
சித்து விளையாட்டு தானோ
உங்கள் கல்வி முறை!

தவிப்பு !!

முன்பறியா வேதனைகள் !
முன்கூட்டிய
யோசனைகள் !
முடிந்து விடும் என்ற போதும்
தொடங்காத நித்திரைகள்!
துணிவு தூரம் இருக்கையிலே
தொடர்ச்சியான சிந்தனைகள்!

இரை தேடி வந்த நான்
இரைக்கே இரை ஆகிவிட்டேன்!
இனி ஒரு வழி உண்டோ !
இதற்கு மேல் இறை உண்டோ!
ஆழி பெருங்காற்றில் அலைகழியும் ஓடம் போல்
வாழ்வெனும் சூதினிலே நிலைகுலையும் மனிதனானேன்!

Tuesday, January 4, 2011

Nest!

Tears of laughter rolled down our faces,
Spines weakened, Legs lost their strength!

A roller coaster ride down our memory lane,
A burst of joy at every touch!

Three days to dispense with formalities,
Three days of play time for the kid in us,

Collage of moments we often crave to have,
String of moments we often fail to get.

We made a home in three days
only to carry a piece of it when we left

Time will fly away, our memories might rust,
but the feeling of warmth and joy will stay on for the rest!

DragonLake!